போதை கலாசாரத்தை தி.மு.க. அரசு வளர்க்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு

 
annamalai annamalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை போற்றி வளர்ப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  தமிழகத்தின் பாதை போதை ஆகிறது, புத்தகப் பைகளை சுமக்க வேண்டிய கைகள், பொட்டலங்களை சுமக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.  கஞ்சா போதை அதிகரிப்பால், குற்றங்கள் அதிகரித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எனவும், பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் போதை கலாசாரத்தை தி.மு.க., அரசு போற்றி வளர்க்கிறது எனவும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.  இதனிடையே தமிழக பா.ஜ.க சார்பில், கஞ்சா போதையில் சமூக விரோதிகளால் நடந்துள்ள குற்ற செயல்கள், கஞ்சா புழக்கம் அதிகரிப்பிற்கான காரணங்களை விளக்கும் வீடியோ பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.