சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் ஸ்டாலின் என்பது தெரியும் - நாராயணன் திருப்பதி

 
narayanan stalin narayanan stalin

சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் தான் மு.க.ஸ்டாலின் என்பதும் எங்களுக்கு தெரியும் என தமிழக பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தி.மு.க., தன் கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும். பா.ஜ.,வுடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட தி.மு.க., செய்து கொள்ளாது. டில்லிக்கு காவடி துாக்கவா செல்கிறேன், கைகட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்? நான் கருணாநிதியின் பிள்ளை என, முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் தி.மு.க., உறுதியாக இருக்கும். ஊழலற்ற, நேர்மையான, தேசிய சிந்தனை உடைய பா.ஜ.க.வுடன் சமரசம் செய்து கொள்ள, தி.மு.க.,வால் இயலாது என்பதை அறிவோம். தமிழினத்தை கொன்று குவிக்க உதவிய போது, டில்லி காங்கிரசிடம் தி.மு.க., கைகட்டி வாய் பொத்தி, காவடி துாக்கியது எப்படி என்பது தெரியும். இந்திராவை, புடவை கட்டிய ஹிட்லர் என கூறிவிட்டு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி கருணாநிதியின் மகன் நீங்கள் என்பதும் தெரியும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.