ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது; ஈபிஎஸ் கடிதம் அளிக்கவில்லை- அப்பாவு

 
appavu

எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம் பரிசீலனையில் உள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

tn

சென்னை சட்டபேரவையில் உள்ள தனது அறையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “ஓ.பன்னீர்செல்வம் உதவியாளர் மூலமாக கொடுத்து அனுப்பிய கடிதம் தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது கடிதம் பரிசீலனையில் இருக்கிறது. எ டப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து இதுவரை  எந்த கடிதமும் வரவில்லை. ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதம் தொடர்பாக சட்ட விதிப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன். எந்தவிதமான விருப்பு வெறுப்பு இல்லாமல் ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் பரிசளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்பட மசோதக்களை ஆளுநர் விரைந்து  குடியரசு தலைவர் மற்றும் மத்திய அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைப்பது  மக்களை அவமதிக்கும் செயல்” என்று  கூறினார்.