தமிழகம் முழுவதும் TANCET பொது நுழைவுத் தேர்வு தொடங்கியது

 
tancet

தமிழகம் முழுவதும் எம்.பி.ஏ, எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகள், அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள  எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர TANCET பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று TANCET தேர்வு நடைபெற்று வருகிறது.  

tancet

தமிழகம் முழுவதும் சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி உள்ளிட்ட 15 நகரங்களில் நடைபெற்று வருகிறது. எம்.பி.ஏ படிப்பிற்கு 21,557 பேரும், எம்.சி.ஏ படிப்பிற்கு 8,391 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 6,762 பேரும் என 36 ஆயிரத்து 710 பேர் இன்று தேர்வு எழுதி வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் TANCET நுழைவுத்தேர்வை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான், எம்.சி.ஏ படிப்பிற்கு இன்று காலை 10 மணிக்கு முதல் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து எம்.பி.ஏ படிப்பிற்கு பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.