TANCET தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

 
tancet

TANCET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு, டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது.  அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்கான டான்செட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி தொடங்கிய நிலையில்,  ஆன்லைன் மூலம் ஏப்ரல் 23ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நடப்பாண்டுக்கான டான்செட் தேர்வுக்கு மொத்தம் 36,710 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டான்செட் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

tancet

இந்நிலையில், TANCET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 14, 15 தேதிகளில் நடைபெற உள்ள TANCET தேர்வுக்கான ஹால் டிக்கெட் https://tancet.annauniv.edu/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 13-ம் தேதி வரை மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எம்சிஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு, 2022, மே 14ம் தேதி  காலை 10 மணிமுதல் பகல் 12 மணி வரையும், எம்பிஏ படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 14ம் தேதி பிற்பகல் மணி 2.30 முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15ம் தேதி காலை மணி 10 மணி  முதல் 2  மணி வரையிலும் நடைபெறு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 10ம் தேதிக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.