பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய நித்தியானந்தா - வீடியோ வைரல்

 
Nithyanandha

நித்தியானந்தா தனது சீடர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
தமிழ்நாட்டின் திருவண்ணாமலையை சேர்ந்தவர் நித்தியானந்தா. குறுகிய காலத்தில் புகழ் வெளிச்சம் சாமியார் நித்யானந்தா, பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். பாலியல் புகார், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள  நித்யானந்தா கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இன்னும் தலைமறைவாகவே உள்ளார். இதனிடையே தான் கைலாசா என்னும் நாட்டை உருவாக்கி இருப்பதாக நித்யானந்தா அறிவித்தது பெரும் பேசு பொருளாக மாறியது. இந்துக்களின் புனித பூமியாக அது இருக்கும் என்றும் நித்தியானந்தா கூறினார்.  ஆனால் அவர் கூறிய கைலாசா எங்கு இருக்கிறது என்ற மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பலரும் அதனை தேடி வருகின்றனர். 


இந்நிலையில், நித்தியானந்தா தனது சீடர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், காரில் வந்து இறங்கும் நித்தியானந்தா தனது சீடர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுகிறார். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.