சந்தேகத்தால் மனைவி கட்டையால் அடித்து கொலை

 
p

 நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

 சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை அடுத்த புதுசத்திரம் பகுதியில் இலங்கை தமிழர்கள் முகாம் அமைந்துள்ளது.  இம்முகாமைச் சேர்ந்த விமல்ராஜ்க்கும் அவரது மனைவி பிரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  

ப

 மனைவி பிரியா மீது விமல்ராஜ் சந்தேகம் கொண்டதால் தான் அடிக்கடி இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.   மனைவியின் நடத்தையில் சந்தேகம் அதிகமானதால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் தடித்திருக்கிறது.   இதில் ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து மனைவி பிரியாவை கடுமையாகத் தாக்கியிருக்கிறார் விமல்ராஜ்.   இதில் படுகாயம் அடைந்த பிரியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

 தகவலறிந்த தேவகோட்டை டவுன் போலீசார்,   பிரியா உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு,  விமல்ராஜ் கைது செய்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.