வாடகை தாய் மூலம் குழந்தை : 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு!!

 
govt

வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு மாற்று கருவறை தாயின் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன் அவர்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்.  சமூகப் பாதுகாப்பு இயக்குநரின் கடிதத்தில், குழந்தைகளை தத்தெடுப்பு செய்யும் அரசு பணியாளர்களுக்கு 270நாட்கள் தத்தெடுப்பு விடுப்பு வழங்கப்படுவதை போன்றே மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

pregnancy

சமூகப் பாதுகாப்பு இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்றும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில் காணப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் உடல் திறன் இழத்தல் மற்றும் தேறுதல் போன்ற சிரமங்கள், மாற்று கருவறை மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேர்வதில்லை என்பதனை கருத்தில் கொண்டும், மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க எதுவாக தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கி ஆணையிடுகிறது.

நிபந்தனைகள்:

baby leg

1. இவ்விடுப்பு அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் பொருந்தும், 2. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான
ஒப்பந்தத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து இருத்தல் வேண்டும். 3. குழந்தை பிரசவித்த மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவசான்றிதழ் அடிப்படையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும். 4. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அக்குழந்தை பிறந்த நாளிலிருந்து விடுப்பு வழங்கலாம். 5. இவ்விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும்