சூரியூர் ஜல்லிக்கட்டு- பார்வையாளர் ஒருவர் மாடு குத்தி பலி

 
jallikattu

சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளராக வந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Jallikattu

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 380 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. திருச்சி மட்டுமல்லாது  அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த போட்டியில் காளை முட்டி 46 பேர் காயமடைந்தனர். அதில் 7 பேர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த போட்டியை வேடிக்கை பார்க்க வந்த புதுக்கோட்டை மாவட்டம் கண்ணக்கோண்பட்டியை சேர்ந்த அரவிந்த் என்கிற 25 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.