#BREAKING "ஈபிஎஸ் வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து" - உச்சநீதிமன்றம் உத்தரவு!!

 
tn

லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

supreme court

அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டரை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டினார்.  இது தொடர்பாக கடந்த  2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .மனுவை விசாரித்த நீதிமன்றம்,  இது குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது . இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்தார்.  இதனால் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கை தள்ளி வைத்தது. 

edappadi palanisamy

 கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கு கிடப்பில் இருந்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்க தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியது. இதையடுத்து கடந்த வாரம் முதல் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்று ஆர். எஸ். பாரதி தாக்கல் செய்த கூடுதல் மனுவில் ஒப்பந்த பணிகளுக்கு அதிக விலை வழங்கியுள்ளதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  தனது உறவினர்களுக்கு பழனிசாமி டெண்டர் வழங்கிய வழக்கை வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்.

edappadi palanisamy

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில்  சிபிஐ விசாரணை ரத்து செய்து , உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை அடிப்படையில் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டாம் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது . அதேசமயம் சிறப்பு விசாரணை வேண்டுமென எடப்பாடி பழனிசாமி ,ஆர்.எஸ். பாரதி ,தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படியானால் யாரும் சிபிஐ விசாரணை கூறவில்லையா என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தற்போது அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது. எந்த பிரச்னையும் இல்லாத சுதந்திரமான விசாரணை வேண்டும் என திமுக கேட்டிருந்த நிலையில்,  லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்று  உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.