கடனில் கட்டிய வீடு- நீர்நிலையில் கட்டப்பட்டதாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதால் தற்கொலை

 
suicide

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த நரியம்பாக்கதை சேர்ந்தவர் மோகன், இவர் மனைவி சுபஸ்ரீ(30). 6 ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

suicide

4 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்த அவர்கள் சொந்தமாக நிலம் வாங்க முற்பட்டு புறம்போக்கு நிலத்தை நான்கரை லட்சத்துக்கு வாங்கி அதில் வீடு கட்டி  கொண்டு இருந்த நிலையில், குன்றத்தூர் வட்டாரவளர்சி  அலுவலகம் சார்பில் அப்பகுதில் 60 வீடுகள் நீர் வழி செல்லும் இடத்தில் கட்டியுள்ளதாக கூறி 21 நாட்களுக்குள் ஆவணங்களை தாக்கல் செய்திட கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதனால் அந்த குடும்பமே அதிர்ச்சியடைந்தனர், அதே வேலையில் சுபஸ்ரீ மட்டும் கணவருக்கு தனியாக உறுக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில் மாமா உங்களை ரொம்ப பிடிக்கும், நான் உங்களை வீடு வாங்க சொல்லி கடனாளியாக்கிவிட்டேன் என எழுதிவைத்து விட்டு புதியதாக கட்டிவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றிய நிலையில் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் நிறைவு பெறாததால் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர்  சைரேந்திரன் விசாரணை செய்திட பரிந்துரை செய்தனர். அதனையடுத்து பிரேத பரிசோதனை செய்த நிலையில் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், பிரேதத்தை வாங்க மறுத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பிரேத்தை உறவினர்கள் வாங்கி சென்றனர்.