திடீரென்று அரசு பள்ளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்! உள்ளே இருந்தது ஸ்ரீஸ்ரீரவிசங்கர்

 
m

 அரசுப் பள்ளியில் திடீரென்று ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் திரண்டு ஓடி வந்து விட்டனர்.  ஹெலிகாப்டரில் உள்ளே இருந்தது வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.  பின்னர் அரை மணி நேரத் தாமதத்திற்கு பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

 ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது ஒகேனியம் கிராமம். இக் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீரென்று ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது.   இதை பார்த்து பதற்றத்துடன் கிராம மக்கள் திரண்டு வந்து நின்றனர் . 

i

 தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.  தற்போது மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   இதை அடுத்து அந்த ஹெலிகாப்டரில் வந்த முக்கிய பிரமுகர் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.  திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக தரை இறக்கப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்தனர். 

 அதன் பின்னர் சுமார் அரை மணி நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் வானிலை சீரான உடன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருப்பூருக்கு சென்றார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.

 திடீரென்று அதுவும் அரசு பள்ளியில் ஹெலிகாப்டர் இறங்கியதால் அப்பகுதி மக்கள் முதலில் அச்சத்தில் இருந்திருக்கிறார்கள்.  பின்னர்தான் விவரம் தெரிய வந்ததும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.