தூத்துக்குடி கடற்கரை பகுதியில் திடீர் கடல் சீற்றம்- மீனவர்கள் அச்சம்

 
Tuticorin

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் திடிரென கடல் சீற்றமடைந்து 100 அடி தூரம் கடல்நீர் வெளியே வந்ததால் தோமையார் கோயில் மற்றும் மீனவர்களின் உபகரணங்களை கடல் நீர் சூழ்ந்தது. இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ளது தாளமுத்துநகர் கடற்கரைப்பகுதி, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு படைகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அமாவாசை தினத்தை முன்னிட்டு கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் வேகம் எடுப்பதன் காரணமாக கடற்கரையிலிருந்து சுமார் 100 அடி தூரம் கடல் நீர் வெளியே வந்தது.

இதன் காரணமாக கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தோமையார் கோயில் மற்றும் மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் மீனவர்கள் மீன்பிடி படகுகளை பழுது பார்க்கக்கூடிய இடம் மற்றும் இருசக்கர வாகனங்கள் கடல் நீரால் சூழ்ந்தது மேலும் நாட்டு படகுகள் பலத்த காற்று காரணமாக ஒன்றோடொன்று மோதி சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டதால் மீனவர்கள் பாதுகாப்பாக படகை கரைக்கு எடுத்து கயிறு மூலம் கட்டி பாதுகாப்பாக வைத்தனர். தொடர்ந்து இதே போன்று கடல் சீற்றம் ஏற்படுவதால் அந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.