அடுத்த அதிர்ச்சி: சென்னை அருகே மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு

 
cc

சென்னை அடுத்த மாங்காடு  பகுதியில் மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவத்தை அடுத்து சென்னை அடுத்த பகுதியிலும் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த வாலிபர் லட்சுமிபதி உயிரிழந்துள்ளார்.  கிடப்பில் போடப்பட்ட இந்த பள்ளத்தில் கால் இடறி விழுந்த அந்த தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி (42) பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

cccc

 உரிய பாதுகாப்பு இல்லாமல் நடந்துவரும் மழை நீர் வடிகால் பணிகளால் இந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறது . லட்சுமிபதியின் உடலை கைப்பற்றிய போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை நீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் நடந்து வந்ததால் தான் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 அண்மையில் சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஊழியர் ஒருவர் இதேபோன்று அசோக்நகரில் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் சென்னை அடுத்த மாங்காடு பகுதியிலும் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.