"பொங்கல் திருநாளில் எஸ்பிஐ தேர்வு" - தேதியை மாற்ற சு. வெங்கடேசன் எம்.பி.கோரிக்கை

 
venkatesan

பொங்கல் திருநாளன்று வைக்கப்படும் எஸ்பிஐ தேர்வுத் தேதி மாற்றப்பட வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

sbi

எஸ்பிஐ வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று நடைபெற உள்ளது.  ஜனவரி 15ஆம் தேதி பொங்கலுக்கு பதில் வேறு ஒரு நாளில் முதன்மை தேர்வு நடத்த தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  சுமார் 5486 பணியிடங்களுக்கான எஸ்பிஐ முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற 15ஆம் தேதி நடைபெறுகிறது.  பலர் பொங்கல் பண்டிகையை ஒட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ள நிலையில் அன்றைய தினம் எஸ்பிஐ வங்கியின் தேர்வு நடத்தப்படுவது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர் திருநாளில் தேர்வு...பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 15 பொங்கல் தமிழர் திருநாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தேர்வுத் தேதி மாற்றப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.