செஸ் ஒலிம்பியாட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்!!

 
stalin

தலைமைச் செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார். ஒரு வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்திய நிலையில் காணொலி  வாயிலாக பணிகளை மேற்கொண்டு வந்தார். 

chess

இந்நிலையில் இன்று தலைமைச் செயலகம் செல்லும் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நிதித்துறை, செஸ் ஒலிம்பியாட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது.

cm stalin

வருகிற 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியார் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் தொடர்ந்து கவனித்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  தற்போது முதல்வர் குணமடைந்து நிலையில் மீண்டும் நேரடி பணிக்கு திரும்பி உள்ளார்.