அமைச்சர் உதயநிதியால் வெயிலில் வாடி வதங்கிய மாணவ, மாணவிகள்

 
s

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு தாமதமானதால் மாணவ, மாணவிகள் ஒரு மணி நேரத்திற்கு மேல் வெயிலில் வாடி வதங்கி இருக்கிறார்கள். 

 தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக் கான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நேற்று துவங்கியது. 

ud

 சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தில் கால்பந்து, கபடி போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார் .  இதை அடுத்து தி. நகர் நடேசன் பூங்கா எதிரில் இருக்கும் கண்ணதாசன் மைதானத்தில் சிலம்பம், கூடைப்பந்து, சதுரங்கப் போட்டிகளையும் நேற்று அமைச்சர் உதயநிதி துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .

காலை 10:30 மணிக்கு அவர் துவக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.   இதனால் விழாவில் பங்கேற்பதற்காக மாணவ,  மாணவிகளை ஒன்பது மணிக்கு அங்கு வந்து அமர சொல்லிவிட்டார்கள் அதிகாரிகள் . ஆனால் அமைச்சர் உதயநிதியோ 11. 45 மணிக்குத்தான் அங்கே வந்திருக்கிறார்.  அதுவரைக்கும் மாணவ, மாணவிகள் வெயிலில் வாடி வதங்கி காத்திருந்திருக்கிறார்கள். 

 பின்னர் வந்த அமைச்சர் உதயநிதி சதுரங்க போட்டியை மட்டும் துவக்கி வைத்து விட்டு வேகமாக சென்றிருக்கிறார். 

 அமைச்சர் முன்னிலையில் சிலம்பாட்ட திறமையை  காட்டுவதற்காக காத்திருந்த மாற்றுத்திறனாளி வீரரும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்.  வெயிலில் வாடி வதங்கியதால் மாணவ ,மாணவிகளும் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.