வகுப்பறையில் பேராசிரியரை அடித்து உதைத்த மாணவர்கள்! காதல் விவகாரத்தை பெற்றோரிடம் சொன்னதால் ஆத்திரம்!

 
for

படிக்கிற வயசுல காதல் வேண்டாம் என்று சொல்லி பெற்றோரிடம் பேராசிரியர் சொன்னதால் மாணவியின் வீட்டில் பிரச்சனை எழுந்து காதலுக்கு தடை போட்டிருக்கிறார்கள்.  இப்படி செய்த கல்லூரி பேராசிரியரை வகுப்பறைக்குள் நுழைந்து அடித்து உதைத்து இருக்கிறார்கள் மாணவர்கள்.  படுகாயம் அடைந்து மயங்கிய பேராசிரியர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இக்கல்லூரியில் ராமர் என்கிற மாணவர் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கணிதம் படித்து வருகிறார்.   இவர் தன்னுடன் படித்து வரும் மாணவியை காதலித்து வந்திருக்கிறார்.  இந்த காதலை கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சிவசங்கர் கண்டித்து இருக்கிறார்.  ஆனால் ராமரும் அவரது காதலியும் கேட்காததால்  மாணவியின் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார் சிவசங்கரன்.

ddj

 இதை எடுத்து மாணவியின் பெற்றோர்கள் காதலுக்கு கடுமையான கண்டிப்பு காட்டி இருக்கிறார்கள்.   இதனால் ஆத்திரமடைந்த ராமர் தனது நண்பர் சக மாணவர்களை சேர்த்துக் கொண்டு கல்லூரிக்கு சென்று பாடல் நடத்திக் கொண்டிருந்த சிவசங்கரை வகுப்பறைக்குள்ளே நுழைந்து அடித்து உதைத்து இருக்கிறார்கள். இதில் கடுமையாக அடிபட்டதில்  பேராசிரியர் மயங்கி விழுந்திருக்கிறார்.

 இதற்குள் அங்கிருந்த பேராசிரியர்கள் அனைவரும் சிவசங்கரை  மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.  தகவல் அறிந்த போலீசார் கல்லூரிக்கு வந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பேராசிரியரை தாக்கிய அந்த நாலு பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது .     காதலை கண்டித்ததற்காக எனக்கு கிடைத்த பரிசு இது என்று பேராசிரியர் சிவசங்கரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.