"விடுமுறை நாட்களில் வகுப்புகள் கூடாது" - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!

 
dpi building

விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது  என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

schools open

தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில்,  சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்றும் தெரிவித்தது.  இதனால் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. 

Tomorrow school leave

இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது. பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும்  என்றும் குறிப்பிட்டுள்ளது.