" தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக் கூடாது" - முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!!

 
mk stalin

மாணவிகளிடம் தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. என்று  முதலமைச்சர் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

suicide
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மாணவ -மாணவிகளின் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைடுத்து திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

student suicide

பல நேரங்களில் மாணவிகள் குடும்பம் மற்றும் சமூகத்தினால் ஏற்படும் தொல்லைகளாலும் , பாலியல் வன்முறைகளாலும் தற்கொலை என்ற முடிவுக்கு தள்ளப்படுகின்றனர்.  இதனால் மாணவர்களின் இந்த எண்ணங்களை போக்கும் வகையில் பள்ளி சூழலில் அவர்களுக்கான முழு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் , உளவியல் மருத்துவர்கள் ஆசிரியராக நியமித்து சிறப்பு ஆலோசனை வகுப்புகளை நடத்த வேண்டும்  என்பதும்  பலரின் கோரிக்கையாக உள்ளது.

 cm stalin

இந்நிலையில் சென்னை குருநானக்  கல்லூரியின் 50ம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,  கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால் என் பணிகளை தொடர்கிறேன். பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  மாணவிகளுக்கு மன உடல் ரீதியாக இழிசெயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது.  மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்று தரப்படும். சமீப காலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் என்னை மன வேதனை அடைய வைத்துள்ளன. கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் இக்கல்வி நிறுவனங்களை தொழிலாக ,வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக கல்வி சேவையாக கருத வேண்டும்.மாணவிகள் மன உறுதியுடன் இருக்க வேண்டும் தற்கொலை எண்ணம் கூடாது. எந்த சூழலிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக் கூடாது. சோதனைகளைச் சாதனைகள் ஆக்கி வளர வேண்டும்.ஆசிரியர்களாக இருந்தாலும் - பெற்றோர்களாக இருந்தாலும் மாணவ, மாணவியரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்" என்றார்.