வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன்! மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த ஆசிரியர்

 
rape

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணிராஜ் (வயது 52) போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

Child sexual abuse | Berry Street

நத்தம்பட்டியில் அரசு உதவிபெறும் ஆர்.சி.உயர்நிலைப் பள்ளியில் 358 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சமூகவியல் ஆசிரியராக பணியாற்றியவரும் ஸ்டீபன் அந்தோணிராஜ் என்பவர் அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை வெளியில் யாரிடமும் சொன்னால் மாணவியை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து மாணவியை அடிக்கடி பாலியல் தொல்லை செய்ததாக பெற்றோரிடம் மாணவி கூறிய நிலையில் பள்ளி முன்பு பெற்றோர்கள், உறவினர்கள் திரண்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்டீபன் அந்தோணி ராஜை நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாணவி, பெற்றோரிடம் விசாரணை நடத்திய பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் ஸ்டீபன் அந்தோணிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.மேலும் ஒரு சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக இவர் துன்புறுத்தல் செய்தது தெரிய வந்துள்ளது.