மாணவிக்கு குழந்தை பிறந்தது - வாலிபர் சிறையிலடைப்பு

 
க்ஷ்

பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்ற 17 வயது சிறுமியை அந்த உறவினர் பாலியல் பலாத்காரம் செய்ததில் அச்சிறுமி கர்ப்பமாக உள்ளார்.   இதை அடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அடுத்த கண்டியன் கோவிலில் வசித்து வருகிறார் விமல்ராஜ்.  26 வயதான இந்த வாலிபருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார். இவரின் உறவு பெண் 17 வயது சிறுமி கடந்த ஆண்டு பள்ளி விடுமுறையில் இவரது வீட்டிற்கு வந்திருக்கிறார். 

சி

 அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை விரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.  இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.  மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.

 இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விமல் ராஜ் அந்த  சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.   இதனால் அந்த சிறுமி  கர்ப்பம் அடைந்திருக்கிறார். 

 நேற்று முன்தினம் குழந்தை பிறந்து இருக்கிறது.  இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விமல்ராஜை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்கள்.