தேர்வு எழுத மறுத்து.. மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

 
m

தேர்வு எழுதாமல் வீட்டில் இருந்து உள்ளதால் பெற்றோர் கண்டித்து இருக்கிறார்கள்.  பெற்றோர்கள் கண்டித்ததால் மனம் உடைந்த மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  சென்னையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 சென்னை தி.நகரில் தாமஸ் சாலை பகுதியில் வசித்து வரும் ராஜா - சிமி தம்பதியின் மகன் ஹரிஷ்.   15 வயதான இந்த சிறுவர் கோபாலபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.    படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்து வந்திருக்கிறார் ஹரிஷ்.  அவர் படித்த பள்ளியில் தேர்வு நடந்து வந்த நிலையில் நேற்று காலையில் ஹரிஷ் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார்.

b

 இதை அடுத்து மகனை பெற்றோர் கண்டித்து இருக்கிறார்கள்.  பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதுமாறு சொல்லி இருக்கிறார்கள்.  அதற்கு ஹரிஷ் முடியாது என்று மறுத்திருக்கிறார்.   இதனால் பெற்றோர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.   பெற்றோர்களுக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  

 இதில் ஆத்திரம் அடைந்த ஹரீஸ் மாடிக்கு ஓடிச் சென்று வீட்டில் மொட்டை மாடியில் இருந்து குதித்து இருக்கிறார்.  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஹரீஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.   அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.   சம்பவம் குறித்து அறிந்த மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.