சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

சென்னை அருகே மறைமலைநகர் அருகே கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை: மறைமலை நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றானர். 

Grappling With The Rise Of Work-Related Suicide During The Pandemic: How To  Support Yourself And Fellow Coworkers

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இதில் எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.டெக் பயின்றுவரும் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் அகர்வால் என்பவரது மகன் சன்ஸ்கர் அகர்வால் வயது(21) என்பவர் இன்று வழக்கம் போல் தனது கல்லூரி வகுப்பை முடித்து விட்டு மாலையில் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிய சன்ஸ்கர் அகர்வால் தனது அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

தகவலறிந்த சக மாணவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். மாணவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை எடுத்து மாணவன் சன்ஸ்கார் அகர்வால் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.