மதுபோதையில் தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்த 12-ம் வகுப்பு மாணவன்

 
Injure

குடிபோதையில் பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கி மண்டையை உடைத்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் பள்ளியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

விழுப்புரத்தில் தனியார் பேருந்து மோதி ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர்  உயிரிழப்பு


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஏ1 படிக்கும் மாணவன் விக்னேஷ் நேற்று மாலை குடிபோதையில் வந்து மாணவர்களிடம் தகராறு செய்ததுடன், மாணவிகளை கேலி செய்துள்ளார். இதனை அறிந்த  பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர், ஏன் இப்படி வருகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், அவரது தலையில் குத்தி மண்டையை உடைத்துள்ளார்.

இதை தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்துக்குச் சென்ற தலைமை ஆசிரியர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மாணவனை அந்த பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்