தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

 
 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் இன்று காலை  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் 9 துறைமுகஙகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

மேற்கு மத்திய -வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வந்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு - வடமேற்கில் நகர்ந்து இன்று காலை  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வானிலை

தற்போது இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கோபால்பூர் அருகே 20 கி.மீ. தூரத்தில் நீடிப்பதாகவும், மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு சத்தீஸ்கரை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை” :  9  துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்!

இந்நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. அதாவது தமிழக கரையோரம் உள்ள சென்னை, கூடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய துறைமுகங்களில் 1-வது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.