சபரிமலைக்கு அதிநவீன சொகுசு சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்

 
u

சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து இன்று முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது .

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் முதல் தேதியான இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.   தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 

ச்ச்ச்

 தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்கள் இன்று முறையாக மாலை அணிவித்து விரதத்தை தொடங்குகின்றார்கள்.  இதனால் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்திருக்கிறது .

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,   சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை திருவிழாக்களின் போது தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக,  தமிழகத்தில் முக்கிய பகுதிகளில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த ஆண்டும் 17ஆம் தேதியான இன்று முதல் 20. 1. 2023 வரை சென்னை, மதுரை, திருச்சி, கடலூர் ஆகிய நகரங்களில் இருந்தும்,  புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் பம்பைக்கு அதே நவீன சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.