30,658 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

 
tn

 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 30,658 பயனாளிகளுக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.74.24 கோடி செலவில் 29 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.156.28 கோடி மதிப்பீட்டிலான 727 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,658 பயனாளிகளுக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இன்றைய தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள்:

tn

திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில் ரூ.53.61 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட மேடை கோட்டைச் சுவர் காவல் நிலையம், மனகாவலம்பிள்ளை மருத்துவமனை சாலையில் பல்நோக்கு கூட்டரங்கம், இராமையன்பட்டி பகுதியில் 5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளிமின் உற்பத்தி நிலையம், நவீனமயமாக்கப்பட்ட வஉசி மைதானம்;வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.8 கோடி செலவில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, முக்கூடல்/பாப்பாக்குடி ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், ஏர்வாடி, பத்மனேரி, முன்னீர்பள்ளம், மூலக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள்;சட்டத்துறை சார்பில் ரூ.4.70 கோடி செலவில் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியில் 12 வகுப்பறைகள், 4 ஆசிரியர் அறைகள் மற்றும் கழிப்பறை கட்டடங்கள்;பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.4.39 கோடி செலவில் வடக்கு செழியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக் கட்டடம், கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடம்;ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.1.90 கோடி செலவில் அங்கன்வாடி கட்டடங்கள், வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்;

tn

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.97 லட்சம் செலவில் அம்பாசமுத்திரம் நகராட்சி - ஆசிரியர் காலனியில் பூங்கா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி - அகஸ்தியாபுரத்தில் பூங்கா;
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ரூ.51.80 லட்சம் செலவில் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் நூலகக் கட்டடம்;இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் ரூ.15 லட்சம் செலவில் திருவேங்கடநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவமனை;என மொத்தம் ரூ.74.24 கோடி செலவில் 29 முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.மேலும், இவ்விழாவில்  முதலமைச்சர் அவர்கள் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரங்கள்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.72.10 கோடி மதிப்பீட்டிலான இருதயம், நரம்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை தொகுதிக் கட்டடம்;ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.72.36 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகக் கட்டடம், ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், உயர்மட்ட பாலம், கலையரங்கங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம், அங்கன்வாடி கட்டடங்கள், நியாய விலைக் கடை கட்டடங்கள், பள்ளி சமையலறை கட்டடங்கள், சாலைப் பணிகள், குடிநீர் பணிகள் உள்ளிட்ட 722 பணிகள்;

tn

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.9.42 கோடி மதிப்பீட்டில் அபிசேகப்பட்டி கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம் மற்றும் குஞ்சு பொறிப்பகம்;நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, அகஸ்தியர்புரம் பகுதியல் உள்ள தகன மேடை மேம்பாட்டுப் பணி மற்றும் களக்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி; பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் ஆகியோரது நினைவு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கம்; என மொத்தம் ரூ.156.28 கோடி மதிப்பீட்டிலான 727 பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில்   முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் விவரங்கள்:

ttn

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 14,038 பயனாளிகளுக்கு ரூ.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 6531 பயனாளிகளுக்கு ரூ.28.82 கோடி ரூபாய்க்கான கடன் உதவிகள், சுயதொழில் தொடங்குவதற்காக 19 திருநங்கைகளுக்கு ரூ.19 லட்சம் கடன் உதவிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூ.6.12 கோடி மதிப்பிலான வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் கருணைத்தொகை; தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.5.89 கோடி ரூபாய்க்கான தொழில் முதலீட்டு கடன்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா, முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் 1008 பயனாளிகளுக்கு ரூ.1.99 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 695 பயனாளிகளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமா மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள், தையல் இயந்திரங்கள், தேய்ப்புப் பெட்டிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.28.72 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரக் கருவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 27 நபர்களுக்கு ரூ.19.71 லட்சம் மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், நவீன செயற்கை கால், ஆவாஸ் மென்பொருள் உபகரணம், கூட்டுறவுத் துறை சார்பில் பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடன், வீட்டுவசதிக் கடன்கள், பெண் தொழில்முனைவோர் கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 30,658 பயனாளிகளுக்கு ரூபாய் 117.78 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.