ஸ்ரீமதி விவகாரம்- புலன் விசாரணை நடத்தும் யூடியூப் சேனல்களுக்கு சிபிசிஐடி எச்சரிக்கை

 
srimathi

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு கிறது. குற்றப்பிரிவு புலனாய்வு துறையின் புலன் விசாரணை பாதிக்கும் வகையில் எந்தவிதமான பதிவு மற்றும் காணொளி காட்சிகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி கேட்டுக்கொண்டுள்ளது.

தரையில் கிடந்த ஸ்ரீமதியின் உடல்.. 4 பேர் தூக்கி செல்லும் புதிய சிசிடிவி  வீடியோ காட்சி..!

இது தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கு நியாயமான புலன் விசாரணை மேற்கொள்ள அனைவரும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், ஏதேனும் தனிநபரோ அல்லது நிறுவனமோ இவ்வாறான இணையான புலன் விசாரணையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி எச்சரித்துள்ளது. தங்களது விசாரணை பாதிக்கும் வகையில் புலன் விசாரணை மேற்கொண்டால் அவர்களது வலைதள பக்கம் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி எச்சரித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீ மதி இறந்தது தொடர்பான வழக்கு குறித்து யாருக்கேனும் உரிய தகவல் கிடைத்தால் அதனை குற்றப்பிரிவு குற்ற புலனாய்வுத் துறையின் உயர் அதிகாரிகள் அலைபேசி எண் 9003848126-க்கு நேரடியாக பகிரும்படி வேண்டி கேட்டு கொள்வதாக சிபிசிஐடி போலிசார் அறிவித்துள்ளனர்.

சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.