மாணவி ஸ்ரீமதி மரணம் - போராட்டம் நடத்த பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் திட்டம் ; போலீசார் குவிப்பு!!

 
tn

கள்ளக்குறிச்சி கனியாமூர் கிராமத்தில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில் நேற்று முன்தினம் இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதுடன்,  மாணவர்களின் கல்வி சான்றிதழ்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம்  தொற்றிக் கொண்டதால் கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது போல் தெரிகிறது என்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக கூறி இதுவரை 300ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

tn

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராட பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.  வாட்ஸ் அப்பில் குழு அமைப்பு போராட்டக்காரர்களை திரட்டிய கல்லூரி மாணவர்கள் மாணவர்களால் அண்ணா நகர்,  கீழ்ப்பாக்கத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

tn

இது குறித்த அழைப்பில் , நமது தோழி ஸ்ரீமதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி மற்றும் கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் தானாக வந்து திரள வேண்டும்.  காரணம் எந்த ஒரு சமூக அமைப்பு அல்லது கள் அமைப்புடன் நடைபெறவில்லை.  கல்லூரி மாணவர்களை முழுக்க முழுக்க ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.  மாணவர்கள் முழக்கத்தை மட்டுமே எழுப்ப வேண்டும். எந்த ஒரு வன்முறை செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.