இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னை வந்த பயணி மயங்கிவிழுந்து உயிரிழப்பு

 
airport

இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னை வந்த இலங்கை நாட்டு பயணி சென்னை விமானநிலையத்தில்,மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டெ


இலங்கை நாட்டின் கொழும்பு நகரை  சேர்ந்தவர் முகமது பாருக் (57). இவர் இலங்கையில் இருந்து இன்று  காலை ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ்  விமானத்தில் சென்னை வந்தார்.விமானம் காலை 8:45 மணிக்கு சென்னை  சர்வதேச விமான நிலையம் வந்து சோ்ந்தது. முகமது பாருக் விமானத்திலிருந்து இறங்கி,குடியுறிமை,சுங்க சோதனைகளை முடித்துவிட்டு,மருத்துவ சோதனையையும் முடித்து விமானநிலையத்திலிருத்து வெளியே வந்தாா். விமானநிலைய போா்டிகோ பகுதியில் வந்து கொண்டிருந்த முகமது பாருக், திடீரனெ மயங்கி கீழே விழந்தார். 

இதையடுத்து சக  பயணிகள், விமான நிலைய  மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினா், முகமது பாருக்கை சோதனை செய்தனா். பின்பு அவா் திடீரென ஏற்பட்ட கடுமையான  மாரடைப்பு காரணமாக  உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.  இது தொடர்பாக, சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானநிலைய போலீசார் விரைந்து வந்து,முகமது பாருக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசாா் 174 பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா். இலங்கையில் உள்ள முகமது பாருக் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா் வியாபாரி என்றும்,வியாபார விசயமாக இலங்கையிலிருந்து சென்னை வந்ததாகவும் கூறப்படுகிறது.