தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள்.. மீண்டும் இலங்கையில் குடியமர்த்த குழு அமைப்பு...

 
இலங்கை தமிழர்கள்


இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த மக்களை,  மீண்டும் இலங்கையில் கூடிய அமர்த்த சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அகதிகள்

1983ல்  இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இடையே உள்நாட்டு போர் தொடங்கியது.  இதையடுத்து  இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைய தொடங்கினர்.  சுமார் 68,000 இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அகதிகள் முகாமல் தங்கி உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்நிலையில் இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை,  மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்பேரில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களை இலங்கையில்   குடியமர்த்துவது குறித்து  இலங்கை அதிபர் அணில் விக்ரமசிங்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  

ரணில் விக்ரமசிங்கே

அதிபரின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்தக்  கூட்டத்தில் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில்  குடியமர்த்துவது பற்றி  விவாதிக்கப்பட்டது.  இந்நிலையில் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில்   குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய குழு ஒன்றை இலங்கை அரசு நேற்று அமைத்துள்ளது.  அதிபரின் கூடுதல் செயலாளர் சந்திமா விகரமசிங்கே  தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  மேலும்  இலங்கை தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான பணிகளை சென்னையில் உள்ள இலங்கை கிளை  தூதராக அலுவலகம் ஒருங்கிணைக்கும் என்றும்  அதிபர் ரனில் விக்ரமசிங்கே அலுவலகம்   தெரிவித்துள்ளது.