விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இருமடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு!!

 
govt

விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இருமடங்காக உயர்த்தி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு பணிகள் , கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் விளையாட்டு வீரர்களுக்கு என சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகிறது.  அத்துடன் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஓய்வூதியமும் வழங்கப்பட்டு வருகிறது. 

Sportsmen pension doubled TamilNadu Government release GO

அந்த வகையில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியமானது ரூபாய் 3000 இலிருந்து 6000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருந்தார்.  கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

tn

இந்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் தற்போது 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 6ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இனிவரும் காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு ஊதியம்  6000 ரூபாயாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.