மதுரையில் இருந்து சீரடிக்கு ஆன்மீக சுற்றுலா ரயில்

 
train

மதுரையில் இருந்து சீரடிக்கு ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.

UK train services cut due to Covid staff absences - BBC News

மதுரையில் இருந்து இரண்டாவது ஆன்மீக சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து ஆகஸ்ட் 21 அன்று காலை 07.45 மணிக்கு புறப்படுகிறது. திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் சென்னை எழும்பூர் வழியாக முதலில் ஹைதராபாத் செல்கிறது. அங்கு சலர்ஜங் அருங்காட்சியகம், சார்மினார், ராமானுஜர் சமத்துவ சிலை,  கோல்கொண்டா கோட்டை பார்த்து ஆகஸ்ட் 24 அன்று சீரடி சாய்பாபா தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மறுநாள் சனிசிங்னாபூர் சென்று பின்பு நாசிக் நகரில் இறங்கி திரியம்பகேஷ்வர், பஞ்சவடி தரிசனம். ஆகஸ்ட் 27 அன்று பண்டரிபுரம் பாண்டுரங்கர் தரிசனம் பின்பு ஆகஸ்ட் 28 அன்று மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்தர் தரிசனத்தோடு சுற்றுலா  ஆகஸ்ட் 29 அன்று நிறைவடைகிறது.  சுற்றுலாவில் தங்கம் இடம் உணவு உள்ளூர் சுற்றுலா போக்குவரத்து ஆகிய உட்பட அளிக்கப்படும் வசதிகளுக்கு ஏற்ப ரூபாய் 30,000, 24,000, 16,900 என மூன்று வகை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருவர் அதற்கு மேற்பட்டு குடும்பமாக செல்லும்போது மேலும் கட்டணம் குறைக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவிற்கு www.ularail.com என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கபட்டுள்ளது..