சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் கண்கவரும் மெட்ரோ ரயில் அரங்கம்

 
tn


சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் கண்கவர் அரங்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக 47-வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு அரங்கங்களும், அரசு சார்ந்த நிறுவனத்தின் அரங்கங்களும் தனியார் அரங்கங்களும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த சுற்றுலா பொருட்காட்சியில், நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் கண்கவர் அரங்கமாக பொதுமக்களின் பார்வைக்கு இடம்பெற்றுள்ளது.

metro

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்), டாக்டர், பிரசன்ன குமார் ஆச்சார்யா (நிதி), ஆகியோர் அரங்கை பார்வையிட்ட பின்னர் தெரிவித்துள்ளதாவது:- சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக அரங்கத்தில் உள்ளே செல்வதற்கு மெட்ரோ இரயில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக மக்கள் உள்ளே சென்று, அரங்கத்தை பார்வையிட்ட பொதுமக்கள் வெளியில் வரும்போது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவம் வழியாக வெளியேறும் வகையில் பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் எப்படி இயங்குகிறதோ அதேபோல் மாதிரி வடிவம் இயக்கப்பட்டு வருகிறது. அரங்கின் உள்ளே சென்னை மெட்ரோ இரயில் பற்றிய பல்வேறு புகைப்படங்கள், சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவமைப்பு, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1 மற்றும் கட்டம்-2 இன் வரைபடம் போன்றவை அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரங்கில் சென்னை மெட்ரோ இரயில் பற்றிய தகவல்கள் செய்திகள் தொலைக்காட்சி வாயிலாக பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

metro

மேலும், இந்த கண்காட்சியில் திருமயிலை மெட்ரோ இரயில் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பு அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பு இங்கு வருகை தரும் பார்வையாளர்கள் மத்தியில் பிரமிப்படைய செய்கிறது. அதோடு இந்த கட்டிட அமைப்பு சவாலான பணியாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.