ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆற்றங்கரைகளில் சிறப்பு வழிபாடு!!

 
tn

ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் என்று சொல்வதுண்டு. அந்த அளவுக்கு ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களும் விசேஷமான ஒன்றாக காட்சியளிக்கும். அதேபோல் ஆடி மாதத்தில்தான் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் ஆடி மாதத்தில் விசேஷமான நாட்கள் பல உண்டு. 

அருளை அள்ளி தரும் ஆடி … இம்மாதத்தின் முக்கிய நாட்கள் இதோ!

அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் நாம் தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்; பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். இந்த நாளின் புதுமண தம்பதியர் தங்கள் வாழ்வு சுகமாக அமைய வேண்டும் என்பதற்காக வெற்றிலை, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல் ஆகியவற்றை சுமங்கலி பெண்களுக்கு அளிப்பர். அத்துடன் நீர்நிலைகளில் பூஜை செய்து சுமங்கலியாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வர்.

அருளை அள்ளி தரும் ஆடி … இம்மாதத்தின் முக்கிய நாட்கள் இதோ!

இந்நிலையில்  ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆற்றங்கரைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புடன் பொதுமக்கள் நீராடி வருகின்றனர்.