இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை!!

 
dgp sylendra babu

இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

drugs

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "போதை பொருட்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருள் கடத்தல் தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்தவர்களை ஏற்கனவே கைது செய்துள்ளோம்.   போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது; கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு டிஜிபி காவலருக்கு பாலியல் தொல்லை சம்பவத்தில் யாருடைய கருத்துகள் மூலம் நடவடிக்கை எடுக்கவில்லை; சம்பவம் நடைபெற்ற அன்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

dgp

காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை வழங்கவும், இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்றார்.