குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு குறைதீர் முகாம்

 
camp

தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான குறைதீர் முகாம் நடைபெற்று வருகிறது. 

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும், சென்னையில் மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாதாந்திர பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குறை தீர்க்கும் முகாம் நடைபெறாத சூழலில் தற்போது இன்று மீண்டும் நடைபெறுகின்றது.

ration card

அதன்படி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் வரும் பொதுமக்களுக்கு உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் பொது மக்களுக்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து அலுவலர்களால் விளக்கம் அளிக்கப்படுகிறது. இனி ஒவ்வொரு மாதம்  2வது சனிக்கிழமை குறைதீர் முகாம் நடைபெறும் என்றும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.