ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!!

 
bus

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து 2,050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

govt

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து 2050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு , தாம்பரம்,  பூவிருந்தவல்லி ஆகிய மூன்று இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

erode bus strike

 இதேபோல, பிற ஊர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 1,650 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் வழக்கமாக விழாக்காலங்களில் இயக்கப்படுவதுபோல சென்னை கோயம்பேட்டில் இருந்துசெல்லும் சில பேருந்துகள், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் பகுதிகளில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.