காணும் பொங்கலையொட்டி இன்று சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

 
t

காணும் பொங்கலையொட்டி சென்னை நகர் புறநகரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.

bus strike

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒட்டி கடந்த மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல்,  மாட்டுப் பொங்கல் ஆகியவை தமிழ்நாட்டில் களைகட்டிய நிலையில் இன்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.  உற்றார்,  உறவினர் மற்றும் நண்பர்களை சந்தித்து இன்றைய நாளில் மக்கள் காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்வர். காணும் பொங்கலையொட்டி சென்னையில் 14,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடும்  மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரையிலும்,  கிண்டி சிறுவர் பூங்கா,  தீவுத்திடல் , வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.  வெளியூரிலிருந்து அதிகாலை சென்னை திரும்புவார்கள் வசதிக்காக 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.