எஸ்பி வேலுமணியுடன் வைகோ திடீர் சந்திப்பு; மோடியை சாடியதால் பரபரப்பு

 
வைகோ

கோவை மத்திய சிறையில் வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு அவர் இழுத்த செக்கிற்கு வைகோ அஞ்சலி செலுத்தினர் . அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் வேலுமணியும் புகழ் அஞ்சலி செலுத்தினார். 

In the case of DMK's continuing defamation Vaiko freed by General Secretary  | திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை

கோவையில்  வ.உ.சிதம்பரனார் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கிற்கு அஞ்சலி செலுத்த இன்று பொது மக்கள் அரசியல் கட்சியினருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழக அரசு சார்பில்
மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி , செக்கிற்கு  அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சிறை துறை அதிகாரிகளும் செக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் வேலுமணியும் அதிமுக தொண்டர்களுடன் அஞ்சலி வ உ சிக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். 

இதனையடுத்து  கோவை மத்திய சிறைக்கு செக்கிற்கு  அஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  வந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்போது வ.உ.சி சித்திரவதைகளை அனுபவித்து , செக்கிழுத்த கொடுமை நடந்தது இந்த சிறையில்தான் எனவும், வ.உ.சி இழுத்த செக்கை தொட்டு பார்த்து வணக்கம் செலுத்த வந்துள்ளேன் என தெரிவித்தார். வ.உ.சியின் போராட்ட வரலாற்றை பேசிய அவர், தூத்துக்குடி என்று சொன்னால் வ.உ.சி என்ற  பெயர் நீடித்து இருக்கும் எனவும் தெரிவித்தார். அப்போது வைகோவிடம் பிரதமர் மோடி படத்தை அரசு அலுவலங்களில் வைப்பது குறித்த கேள்வி எழுப்பிய போது, உயர்ந்த தலைவரை பற்றி பேசும் போது யாரையோ பேசுகின்றீர்கள் என்று வைகோ காட்டமாக பதில் அளித்தார். இதனையடுத்து  செக்கிற்கு மதிமுக பொதுசெயலாளர் அஞ்சலி செலுத்த சென்ற போது, அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான வேலுமணி அஞ்சலி செலுத்தி விட்டு வந்தார். 

அப்போது  வைகோவும், வேலுமணியும் சந்தித்து ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர். பின்னர் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினார். இதே போல பல்வேறு அரசியல் கட்சியினரும் செக்கிற்கு அஞ்சலி செலுத்தினர்.