இந்த ஊருக்குச் செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..

 
தெற்கு ரயில்வே

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு  ரயில்வே அறிவித்திருக்கிறது.  

ரயில்வே

இதுகுறித்து தெற்கு  ரயில்வே நிர்வாகம்  வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில், “சிவகங்கை – மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி – மானாமதுரை மற்றும் சூடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே ஆகஸ்ட் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ரமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாகவும் புறப்படும்.

தெற்கு ரயில்வே

மேலும் திருச்சி – மானாமதுரை – திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை சிவகங்கை – மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.  திண்டுக்கல் – அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே நடைபெறப்போகும் பராமரிப்பு பணிகளால் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்ட் 31 வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயம்புத்தூர் – நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும். இதே காலத்தில் சென்னை – குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.