குடியரசு தினத்தன்று மின்சார ரயில்கள் இந்த அட்டவணைப்படி இயங்கும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..

 
train

குடியரசு தினத்தன்று மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் வருகிற 26ஆம் தேதி 74ஆவது குடியரசு தின விழா கோலகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தின விடுமுறை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ள தெற்கு ரயில்வே, அதற்கான முன்பதிவுகளையும் அண்மையில் தொடங்கியது. அதேநேரம் வட மாநிலங்களில் இருந்து முக்கிய வழித்தடங்கள் வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்பட்டுள்ளன.  

train

இப்படியாக தொலைதூர  பயணிகள் ரயில் சேவை ஒருபுறமிருக்க, புறநகர் மின்சார ரயில்கள் எந்த அட்டவணைப்படி இயக்கப்படும் என்கிற கேள்வி பொதுமக்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில்  இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.