பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை? - மத்திய அரசு தீவிர ஆலோசனை

 
pfi

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. 

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய இடங்களில் நேற்று என்ஐஏ சோதனை நடத்தியது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து சோதனை நடைபெற்றது. தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி தருவது  தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் பாப்புலர்  ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை நிர்வாகிகள் இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்றது. சென்னை, மதுரை ,திண்டுக்கல் ,கடலூர் ,தேனி, ராமநாதபுரம், தென்காசி ,கோவை ஆகிய மாவட்டங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.  

PFI

இந்நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வளைகுடா நாடுகளில் நெட் வொர்க் அமைத்து மிகப்பெரிய அளவில் பல கோடி ரூபாய் நிதி திரட்டி இருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சதி திட்டத்தின் அடிப்படையில் இந்த பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.  பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இதற்காக வளைகுடா நாடுகளில் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இதேபோல் தேசிய புலனாய்வு முகமையும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதன் காரணமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.