6 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை - ஒப்பந்தப்புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!!

 
corporation

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 6 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

govt

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள் ,38 உயர்நிலைப் பள்ளிகள் ,32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தமாக 291 பள்ளிகள் இயங்கி வருகின்றன. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை  அதிகரிக்க கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில்,  6 பள்ளிகளில் முதற்கட்டமாக ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிக்கு ஒப்பந்த புள்ளி தற்போது கோரப்பட்டுள்ளது. 

tn
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆறு பள்ளிகளில் வார்டு (58 ,61, 78 ,104, 107 மற்றும் 108 ) ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணிக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.  பணியின் மதிப்பு தொகை 62 லட்சம் என்றும் ஒப்ப முன் வைப்பு தொகை 62,000 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்ப படிவங்கள்  https://tntenders.gov.in  என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்றும்,  நிறைவு செய்யப்பட்ட ஒப்ப புள்ளிகள் சமர்ப்பிக்க வருகிற 1ம் தேதி பிற்பகல் 3 மணி இறுதி நாள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஒப்பம் திறக்கப்படும் நாள் ஆகஸ்ட் 2ம் தேதி அன்று பிற்பகல் 3 15 மணி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 மாதத்தில் ஓப்பப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.