சென்னையில் ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்பனை - 100 பேருக்கு அபராதம்

 
number

சென்னையில் அரசால் தடை செய்யப்பட்ட மேக்னெட்டிக் நம்பர் பிளேட்டுகள் விற்ற கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

number

நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் குமார், ஜோஸ்வா, ஆலந்தூர் சரத்குமார் ஆகிய மூன்று கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வாகன விதிமுறைகளை மீறிய இந்த நம்பர் பிளேட்டுகளை எளிதாக மடக்கி வைத்து விடலாம்.

திருட்டு , வழிப்பறி ,சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்கள் கண்காணிப்பு கேமராக்களில் சிக்காமல் இருப்பதற்கும், போலீசாரின் பிடியில் இருந்து தப்புவதற்கும் இந்த வகையான நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தி வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடந்த சிறப்பு அதிரடி சோதனையில் மேக்னெட்டிக் நம்பர் பிளேட்டுகள் பொருத்தியிருந்த 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.