பிப்ரவரி 10-க்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

 
tn

தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்கியதாக குற்றச்சாட்டை எழுந்த நிலையில் இன்று விசாரணைக்காக மருத்துவ கவுன்சில் முன்பு மருத்துவர்  ஷர்மிகா ஆஜரானார்.

tn

சென்னையை சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் , குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும் , தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும் போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இவை சர்ச்சையானது. இதுகுறித்து மருத்துவர் ஷர்மிகா சித்த மருத்துவ குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மருத்துவ சர்மிளாக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

tn


இந்நிலையில் குழந்தை பிறப்பு முதல் அழகு குறிப்பு வரை ட்யூடிப் மூலமாக மருத்துவ குறிப்புகளை கூறி வந்த சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ இயக்குனர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்திய பின் சித்த மருத்துவ இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சர்ச்சை மருத்துவ கருத்துகள் குறித்து சித்த மருத்துவ ஷர்மிகாவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.  பிப்ரவரி 10-க்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த புகார்கள் குறித்த விவரங்கள் ஷர்மிகாவிடம் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.