பழனி குடமுழுக்கு காண தேர்வானவர்களுக்கு குறுஞ்செய்தி!

 
palani

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட 2000 பக்தர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

tiruchendur murugan temple


பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. மலைமீது நடைபெறும் குடமுழுக்கு விழாவில் 6 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குடமுழுக்கு விழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இணைய வழியில் விண்ணப்பித்திருந்த பக்தர்களை குழுக்கள் முறையில் தேர்வு செய்து கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கவுள்ளது. அதன்படி பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் 2000 பக்தர்கள் கலந்து அனுமதி அளித்து  கோயில் நிர்வாகம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. 

மொத்தம் 51,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2000 பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அலைபேசியில் வந்த குறுஞ்செய்தி மற்றும் அடையாள அட்டையை காண்பித்து 25-ம் தேதிக்குள் பழனி மலை அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் அனுமதி அட்டையை பக்தர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.