மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. இந்த 6 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..

 
Tasmac

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள மதுக்கடைகளுக்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அளித்து  மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி   10 நாட்களுக்குன் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டிருக்கும்..  இந்தநாட்களில் திருவண்ணாமலையில் உள்ள மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு  கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான  கொடியேற்ற விழா இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை தீபம்
 
இதனையொட்டி, திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை அருகே இயங்கும் டாஸ்மாக் கடை,  வேங்கிக்கால் ஏரிக்கரை,  புறவழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை,  நல்லவன்பாளையம் மதுக்கடை   மற்றும் திருவண்ணாமலை நகரின் உட்பகுதியில் இயங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுக்கடைகளான  திரிசூல், நளா, அஷ்ரேயா,  அருணாச்சலா,  வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகள் ஆகிய அனைத்திற்கும் டிசம்பர் 2ம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர்ந்து மூட மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.