சென்னையில் அதிர்ச்சி.. ‘வாய்தா’ பட நடிகை தூக்கிட்டு தற்கொலை..

 
சென்னையில் அதிர்ச்சி..   ‘வாய்தா’ பட நடிகை தூக்கிட்டு தற்கொலை..

சென்னையில் காதல் தோல்வியா தீபா என்கிற துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையில் அதிர்ச்சி..   ‘வாய்தா’ பட நடிகை தூக்கிட்டு தற்கொலை..

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தீபா பவுலின். இவர்  தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.  அண்மையில் வெளியான வாய்தா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன் விஷாலின் துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.  இந்நிலையில் தீபா நேற்று மதியம் தனது வீட்டில் , துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  உறவினர்கள் அவரை தொலிபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் நேரில் சென்று பார்த்தபோது, தீபா வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.  பின்னர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிர்ச்சி..   ‘வாய்தா’ பட நடிகை தூக்கிட்டு தற்கொலை..

பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த கோயம்பேடு காவல்துறையினர், தீபாவின் உடலைக் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.  அவரிடமிருந்து தற்கொலை கடிதம் ஒன்றையில் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்றும்; ஆகையால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும்; தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அதன்படி நடிகை தீபா காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து  கோயம்பேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.